×

இளம்பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்றவர் கைது

ஓசூர், ஆக.2: சூளகிரி தாலுகா துப்புகானப்பள்ளியை சேர்ந்தவர் பிரியங்கா (27). ஓசூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி மதியம், ஓசூர் பஸ் ஸ்டாண்டில், பஸ்சுக்காக காத்திருந்த போது, அங்கு வந்த வாலிபர் அவரிடம் கத்திமுனையில் செல்போனை பறித்து செல்ல முயன்றார். இதை கண்ட அங்கிருந்தவர்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த நவீன் (20) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Priyanka ,Thuppukanapalli ,Choolagiri taluk ,
× RELATED 72 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்