×

மணவாளநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், மிதிவண்டிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் உள்ள கேஇஎன்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கேவிஜி.உமா மகேஸ்வரி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் க.அரிகிருஷ்ணன், ச.மகாலிங்கம், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர் ஆர்.மோகனசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், தாடி என்.நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஞானசேகரன், உதவி தலைமை ஆசிரியர்கள் பிரபாகரன், சரளா, வசந்தி ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பள்ளி சீருடைகள் மற்றும் மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு காரணம் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 17,391 மாணவர்களுக்கு ரூ.8 கோடியே 38 லட்சத்து 51 ஆயிரத்து 460 மதிப்பில் முதல் கட்டமாக மணவாள நகர், கேஇஎன்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 308 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலமாக ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் 4 செட் சீருடைகள் தைத்து வழங்கப்படுகிறது, எனவே மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு நல்ல முறையில் படித்து வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் ச.அருணன், வி.எஸ்.நேதாஜி, பொன்.பாண்டியன், ஆர்.ராஜேந்திரகுமார், கே.ஏ.மதியழகன், கொப்பூர் டி.திலீப்குமார், மெய்யழகன், சி.ஆர்.குமரன், டில்லி, ஏ.எஸ்.மணி, திராவிட மணி, ராமதாஸ், பெருமாள், வாசு, கே.ஏ.சத்யா, ராம்கி, காஞ்சிப்பாடி சரவணன், விழா குழுவினர் ஆனந்த், டென்னிசன் செல்வகுமார், ஹரிபாபு, மாலதி, ரேவதி, நித்யா, பிரியா, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் சங்கீதா, ஏ.வி.ஷீபா, நீலகண்டன் கருணாநிதி, ராஜேஸ்வரி, ரேகா, பவித்ரா, கே.எஸ்.சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மணவாளநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், மிதிவண்டிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Manawalanagar Govt High School ,Minister ,R.Gandhi ,Thiruvallur ,KENC Government Higher Secondary School ,Manavala Nagar ,District Collector ,T.Prabhushankar.… ,Manawalanagar Government Higher Secondary School ,
× RELATED மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி...