×

தொழிலாளியை தாக்கியவர் கைது

ஓசூர், ஜூலை 31: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அதுல்யா(35). இவர் ஓசூர் சின்னஎலசகிரி பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 28ம் தேதி இரவு இவரது வீட்டின் முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மலியாகுமார் (34) என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது, அதுல்யாவின் மனைவி கதவை திறந்தபோது அவரிடம் மலியாகுமார் தகராறில் ஈடுபட்டார். இதை தட்டிகேட்ட அதுல்யாவை, மலியாகுமார் தாக்கினார். இதுகுறித்து அதுல்யா சிப்காட் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலியா குமாரை கைது செய்தனர்.

The post தொழிலாளியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Atulya ,Odisha ,Hosur Chinnaelasakhiri ,Maliakumar ,Dinakaran ,
× RELATED ஓசூர் மாநகராட்சியில் நாளை சிறப்பு முகாம்