×

தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்துக்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடை வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 79,654 மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்பட உள்ளது. சமூக நலத்துறையின் மூலம் தையல் கூட்டுறவு அமைப்பில் உள்ள பெண்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு குழந்தைக்கும் அளவெடுத்து, தைத்து, பின்னர் நேரடியாக வழங்குகின்றனர்.

குழந்தைகளுக்கு தரமான சீருடை முறையாக வழங்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து சீருடைகளை முறையாக வழங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும்.

The post தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்துக்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடை வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Geethajevan ,Tuthukudi ,Kitajevan ,Thoothukudi Samuelpuram Municipal Primary School ,Social Welfare Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...