×

செம்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை: அமைச்சர் திறந்து வைத்தார்

 

அருப்புக்கோட்டை, ஜூலை 22: செம்பட்டியில் புதிய பகுதிநேர ரேஷன் கடையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பகுதிநேர ரேஷன் கடை கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசுகையில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கடையின் மூலம் 697 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன், ஆர்டிஓ வள்ளிக்கண்ணு, மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், தாசில்தார் செந்தில்வேல், ஒன்றிய சேர்மன் சசிகலா பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல்கமீது, முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post செம்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை: அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Sembatti ,Minister ,Aruppukkottai ,Sathur Ramachandran ,Sempatti ,Aruppukkottai Panchayat Union… ,
× RELATED வாலிபர் சடலமாக மீட்பு