×

மேலூர் அருகே கன்னி இன நாய்கள் கண்காட்சி

 

மேலூர், ஜூலை 22: மேலூர் அருகே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கன்னி நாய்கள் பங்கேற்ற கண்காட்சி நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆமூர் கிராமத்தில், கன்னி நாய்களுக்கான 5ம் ஆண்டு கண்காட்சி நேற்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்னி இன நாய்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டது. இத்துடன் பாரம்பரிய வேட்டை நாய்களும் பங்கேற்றன. கன்னி தமிழன் பெருமை நண்பர்கள் குழு சார்பில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கால்நடை மருத்துவர் ராஜேஷ், நாகை திருவள்ளுவன், கடம்பூர் ராஜா, வைரம்பட்டி முருகேசன், கம்பம் செந்தில், முரளி கலந்து கொண்டனர். கன்னி நாய்களின் உரிமையாளர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. கண்காட்சிக்கான ஏற்பாட்டினை ஆமூர் பிரபு செய்திருந்தார்.

The post மேலூர் அருகே கன்னி இன நாய்கள் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Virgin breed dog fair ,Melur ,fair for ,dogs ,Amur ,Madurai ,Tamil Nadu ,breed ,
× RELATED செங்கோட்டை பகுதி கடைகளில் 22 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்