×

குப்பையுடன் தவறுதலாக வீசப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்

 

சென்னை, ஜூலை 22: விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலையில் உள்ள வின்ட்சர் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவராஜ். இவர், கடந்த 2 தினங்களுக்கு முன், தனது வீட்டை சுத்தம் செய்து, குப்பையை சேகரித்து அருகில் இருந்த மாநகராட்சி குப்பை தொட்டியில் போட்டுள்ளார். சிறிது நேரத்தில், வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மாயமானது தெரிந்தது. வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

அப்போது தான், குப்பையுடன் சேர்த்து தவறுதலாக வைர நெக்லசை போட்டுவிட்டது தெரியவந்தது. உடனடியாக, இதுகுறித்து மண்டலம் 10ல் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் அந்த பகுதியில் இருந்த குப்பை தொட்டியை சோதனை செய்த போது, வைர நெக்லஸ் இருப்பது தெரிந்தது. பின்னர், அந்ந கையை உரியவரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்த தூய்மை பணியாளர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post குப்பையுடன் தவறுதலாக வீசப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Devaraj ,Windsor Park Apartments ,Rajamannar Road, Virugampakkam ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...