×

சூறாவளி காற்றில் சாய்ந்த பூண்டு செடிகள் தரம் குறையும் விவசாயிகள் அச்சம்

 

ஊட்டி, ஜூலை 20: நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் வெள்ளை பூண்டு ஆகியன அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. வெள்ளை பூண்டு ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி, கொல்லிமலை, எம்.பாலாடா, கேத்தி பாலாடா, கோலனிமட்டம் போன்ற பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. நீலகிரியில் பயிரிடப்படும் மலை காய்கறி பயிர்களில் அதிகளவு முதலீடு போட்டு பயிர் செய்யும் ஒரே பயிர் பூண்டுதான்.

விதை விலை அதிகமாக உள்ளதும், பராமரிப்பு செலவு அதிகம் கொண்டது.எனவே, ஒரு சிலர் மட்டுமே தற்போது அதிக முதலீடு செய்து பூண்டு விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், பலத்த சூறாவளி காற்றில் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான பூண்டு செடிகள் சாய்ந்துவிட்டன. மேலும், பூண்டின் தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது போன்று காரணங்களால் உரிய விலை கிடைக்க வாய்ப்பில்ைல என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

The post சூறாவளி காற்றில் சாய்ந்த பூண்டு செடிகள் தரம் குறையும் விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Palata ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...