×

வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை

பணகுடி, ஜூலை 20: மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் வென்று, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சென்னை வேளச்சேரியில் 40வது மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு 8 தங்கம், 11 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் மாணவர்கள் சஞ்சய் ஜெஷ்வா, சகாய சிதின், ஜாய் , சகாய ரான்சி, ஜெய்வின் ஆன்டோ, மரிய வின்சியா, சாஷினி,  ஹர்ஷினி, போஷிகா ஆகிய 9 மாணவ- மாணவிகளும் அடுத்த மாதம் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஒடிசாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த ஆசிரியர்களான சுல்தான் சிக்கந்தர் பாஷா, சிக்கந்தர் சார்ஜன், அஜித்குமார் மற்றும் குணால் ஆகியோரை பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி பிள்ளை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

The post வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Vadakankulam ,Panagudi ,Vadakankulam SAV Balakrishna School ,40th State Level Swimming Championships ,Velachery, Chennai ,Vadakankulam SAV Balakrishna ,Dinakaran ,
× RELATED தென்மண்டல அளவில் கைப்பந்து போட்டி...