×

தென்றல் காற்றுடன் ஆர்ப்பரிக்கும் அருவிகள்

தென்காசி, ஜூலை 20: குற்றாலத்தில் கடந்த 10 தினங்களாக சாரல் நன்றாக பொழிகிறது. நேற்று லேசான வெயிலும், சாரலும் மாறி மாறி காணப்பட்டது. பெரும்பாலான நேரம் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இதமான தென்றல் காற்று வீசுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் பசுமை நிறைந்து காணப்படுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும், பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சீசன் நன்றாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் அனைத்து அருவிகளிலும் வரிசையின்றி குளித்து மகிழ்ந்தனர்.

The post தென்றல் காற்றுடன் ஆர்ப்பரிக்கும் அருவிகள் appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Courtalam ,Dinakaran ,
× RELATED சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை