சென்னை: தமிழகத்தில் பொது விழியோகத்திட்டத்தின் கீழ் நியாவிலை கடைகளில் வழங்கப்பட்டு வரகூடிய துவரம்பருப்பு பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளதாக தமிழ்நாடு உணவு வழங்கல் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
பொது விநியோக திட்டத்தின் கீழ் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை வழங்குவது நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பொதுமக்களுக்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை தேவையான அளவில் இருப்பில் வைத்து கொள்ளும் அளவிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், பாமாயில் மற்றும் துவரம்பருப்பு வழங்குவதை நிறுத்துவதற்கு தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என தமிழ்நாடு உணவு வழங்கல் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
வரும் 27-ம் தேதிக்குள் டெண்டர் எடுக்க கூடிய நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என அறிக்கப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
The post பொது விநியோக திட்டத்துக்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.