கரூர், ஜூலை 18: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது அடிப்படையில் பவானிசாகரில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் என்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் ஆண்டங்கோயில் மேல்பாகம் ஊராட்சி மன்ற தலைவர் கே. எம் பெரியசாமி, பட்டிமன்ற தலைவர் சுப்பிரமணியன் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஜெகதாபி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழக அரசு வழங்கிய பயிற்சிகள் ஊராட்சி மன்ற பகுதியில் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஊராட்சியில் பொது சுகாதாரம் அடிப்படை கட்டமைப்பு வசதி பராமரித்தல் கிராம சாலைகளை மேம்படுத்துதல் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டும் வசதி பொது சுகாதாரத்திற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள், பொதுமக்களிடம் மத நல்லிணத்தை ஏற்படுத்துதல், கிராம வளர்ச்சியை மேம்படுத்தில் மக்களின் பங்கு எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை முன்னிட்டு ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய திட்டம் குறித்து கையேடும் ஊராட்சி மன்ற தலைவருக்கு வழங்கப்பட்டது.
The post ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உள்ளூர் மயமாக்குதல் சிறப்பு பயிற்சி appeared first on Dinakaran.