கரூர், ஜூலை 18: கரூர் முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவர்கள் விளம்பர சுவர்களாக மாறி வருவதை கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிககுட்பட்ட சுங்ககேட் காந்திகிராமம், சுங்ககேட் தாந்தோணிமலை, திருமாநிலையூர் சுக்காலியூர், மனோகரா கார்னர் திருக்காம்புலியூர், திண்ணப்பா கார்னர் முதல் சர்ச் கார்னர் வரை என மாநகரின் முக்கிய சாலைகளில் எளிதாக போக்குவரத்து நடைபெறும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் அமைப்புகளின் சார்பில் தடுப்புச்சுவரில் விளம்பர நோட்டீஸ்கள் அதிகளவு ஓட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற நோட்டீஸ்கள் ஒட்டப்படுவதால், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, பெரும்பாலான பகுதிகளில் தடுப்புச் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post கரூர் முக்கிய சாலைகளில் தடுப்பு சுவர்களில் விளம்பரம் எழுதுவதை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.