×
Saravana Stores

மஞ்சூர் பஜாரில் உலா வந்த காட்டு மாடு

 

மஞ்சூர், ஜூலை 18: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக கரடி மற்றும் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அவ்வப்போது சிறுத்தைகளும் திடிர் விஜயம் செய்து பஜார் பகுதியில் கடைகளின் முன்பு படுத்து கொண்டிருக்கும் தெருநாய்களை கொன்று தூக்கி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் மாலை மஞ்சூர் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்துத்தும் மிகுதியாக காணப்பட்டது.

அப்போது அல்லாடா பகுதியில் இருந்து வந்த காட்டு மாடு ஒன்று பஜாருக்குள் நுழைந்து ராஜநடைபோட துவங்கியது. திடீரென காட்டு மாடு எதிரே வருவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடி உயிர் தப்பினர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் எதிரே வந்த வாகனங்களை பொருட்படுத்தாத காட்டு மாடு கடைகள், குடியிருப்பு வழியாக கீழ்குந்தா சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்று சாலையோரத்தில் இருந்த ஒற்றையடி பாதையில் இறங்கி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. பஜாரில் நடந்து சென்ற சென்ற காட்டு மாடை பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் மஞ்சூர் பஜார் பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post மஞ்சூர் பஜாரில் உலா வந்த காட்டு மாடு appeared first on Dinakaran.

Tags : Manjoor Bazaar ,Manjoor ,Nilgiris district ,
× RELATED மஞ்சூர் பகுதியில் பூத்துக்குலுங்கும் ரெட்லீப் மலர்கள்