தண்டராம்பட்டு, ஜூலை 18: தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த வேன் டிரைவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தண்டராம்பட்டு அடுத்த அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 43 வயது பெண், வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மனோகர்(43), வேன் டிரைவர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் பெண் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மனோகர் திடீரென அவரிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதும் மனோகர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் வாணாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் வழக்கு பதிந்து வேன் டிரைவர் மனோகரை நேற்று கைது செய்தார். பின்னர், அவரை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
The post பெண்ணிடம் சில்மிஷம் செய்த டிரைவர் கைது தண்டராம்பட்டு அருகே appeared first on Dinakaran.