×
Saravana Stores

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற பெண் கைது * மகனுக்கு போலீஸ் வலை * பைக், 444 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்து

செய்யாறு, ஜூலை 18: செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ேமலும், 444 மதுபாட்டில்கள், பைக்கை பறிமுதல் செய்ததோடு அவரது மகனை தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, வெங்கடேசன் மற்றும் போலீசார் சிவபெருமாள், பச்சையப்பன், ரேணுகா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் அழிஞ்சல்பட்டு கிராமத்திற்கு சென்றனர். தொடர்ந்து, தகவல் கிடைத்த வீட்டில் சோதனை செய்துபோது, வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ₹62 ஆயிரம் மதிப்பிலான 420 குவாட்டர் மதுபாட்டில்கள், 24 பீர்பாட்டில்கள் மற்றும் அங்கிருந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மது விற்பனையில் ஈடுபட்ட அஜ்மல்கான் மனைவி மதினா(39) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், மதுபாட்டில்களை டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், போலீசை பார்த்ததும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள மதினாவின் மகன் ஷாருக்கானை தேடி வருகின்றனர். இதுகுறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து மதினாவை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

The post மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற பெண் கைது * மகனுக்கு போலீஸ் வலை * பைக், 444 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்து appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Thiruvannamalai District ,Dinakaran ,
× RELATED செய்யாறு அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: போக்சோவில் வாலிபர் கைது