×
Saravana Stores

உணவில் விஷம் கலப்பு 2 ஆடுகள் பரிதாப பலி

கடலூர், ஜூலை 18: கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் உஷா(38). இவர் தனது வீட்டில் மூன்று ஆடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டு முன் இரண்டு ஆடுகள் திடீரென்று வாயில் நுரை தள்ளியபடி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன. இதையடுத்து உஷா ஆடுகளை சென்று பார்த்த போது அந்த ஆடுகளுக்கு யாரோ மர்ம நபர்கள், உணவில் விஷம் வைத்துள்ளதால் அதனை சாப்பிட்ட ஆடுகள் இறந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உணவில் விஷம் கலப்பு 2 ஆடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Usha ,Pudupalayam, Cuddalore ,
× RELATED முகவாதம் உள்ளதா? கவலை வேண்டாம்