×
Saravana Stores

சாராய வியாபாரிகளிடம் நேரடி தொடர்பு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 எஸ்ஐ உள்பட 62 போலீசார் வேலூர் சரகத்திற்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி, ஜூலை 18: கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 62 போலீசார் சாராய வியாபாரிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோதமான முறையில் விற்பனையில் ஈடுபடும் நபர்களிடம் நேரடி தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வேலூர் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்து சென்னை வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதில் கடந்த மாதம் 19 ம்தேதி கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் மொத்தம் 229 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி 67 பேர் உயிரிழந்தனர்.

இதில் சிகிச்சையில் குணமடைந்து நலமுடன் 161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த போலீசாரை கண்டறிந்து அதிரடி இடமாற்றங்களை செய்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் 62 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்ஐ பாலமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பையா, வெங்கடேஷ், ராஜேந்திரன், காவலர்கள் சந்திரன், மின்னல்ஒலி, பாலசுப்ரமணியன், பழனிவேல், ராஜி, மதுபாலன், வேலுமணி, ஏழுமலை, கண்ணன், பாலாஜி, சக்திவேல், புருசோத்சிங், செந்தில்குமார் ஆகிய 17 பேர் வேலூர் சரகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதில் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி தனி பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன் ஆகிய இருவரையும் சேர்த்து வேலூர் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 31 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதாவது ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தரசேகர், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், காணை சப்-இன்ஸ்பெக்டர் தீபன், மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி, திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, பாண்டியன், அறிவிநாயகமூர்த்தி, பாஸ்கர் மற்றும் காவலர்கள் ராஜா, வேலு, மாரியம்மாள், கோபாலகிருஷ்ணன், சுந்தர், இளையராஜா, ராஜேஷ், புனிதா, மகேஷ், ஆனந்தன், ஜெகவீரபாண்டியன், ராஜாராம், சதீஷ், பாண்டிசெல்வி, முருகானந்தம், தனசேகரன், நாகராஜன், சுரேஷ், காளிதாஷ், அருண் ஆகிய 31 பேர் வேலூர் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 14 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதாவது கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், தெர்மல் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ், முஷ்னம் சப்-இன்ஸ்பெக்டர் தேவி, விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார் மற்றும் ரவிக்குமார், வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, குறிஞ்சிப்பாடி புஷ்பராஜ், முத்தாண்டிகுப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் காவலர்கள் சோலைமணி, விஜயன், நாதனபதி, மரியாஜோசப், தனாஜியன் உள்பட 14 பேர் வேலூர் சரகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சில போலீசார் அடுத்த கட்டமாக காஞ்சிபுரம் சரகத்துக்கு மாற்றம் செய்வதற்கான பட்டியல் ஒன்று தயாராகி வருவதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post சாராய வியாபாரிகளிடம் நேரடி தொடர்பு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 எஸ்ஐ உள்பட 62 போலீசார் வேலூர் சரகத்திற்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi, ,Villupuram, ,Cuddalore ,Vellore ,Kallakurichi ,Villupuram ,Vellore… ,Kallakurichi, Villupuram, Cuddalore districts ,SI ,Vellore Sargam ,Dinakaran ,
× RELATED மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை ஒத்திவைப்பு