சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது. கொலை தொடர்பாக பெண் வழக்கறிஞர் மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ல் படுகொலை செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இத வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கிடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் காவல்துறையினர் இன்றைய தினம் விசாரணை நடத்தினர். இவர்களுக்கு இடையே நடைபெற்ற பணப்பரிவர்தனை குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது: தீவிர விசாரணை நடத்தும் காவல்துறை appeared first on Dinakaran.