நன்றி குங்குமம் தோழி
தற்சமயம் பல வீடுகளில் மின்சாரம் தடைபடும் சமயங்களில் பயன்படுத்த இன்வெட்டர்கள் வைத்துக் ெகாள்கிறார்கள். ஆனால் அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். அதை சரிவர பாதுகாத்து, எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் இன்வெட்டர்களும் நீண்ட நாள் உழைக்கும். அதனால் ஏற்படும் விபத்துகளும் தவிர்க்கப்படும்.
*சான்றிதழ் பெற்ற மின்சார ஊழியர்களைக் கொண்டே இன்வெட்டர்களை நிறுவ வேண்டும்.
*எப்போதுமே இணைப்பை ெமாத்தமான கிரவுண்டிங் சிஸ்டத்துடன் இணைக்கவும்.
*ரிப்பேர் செய்வதற்கு தகுதியானவரால் மட்டும் செய்தல் வேண்டும்.
*கெபாசிட்களின் (capacitor) முனைகளைத் தொடாதீர்கள். இவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகும் அதிக வோல்டேஜ் இருக்கும். சர்க்யூட்டுகளை தொடுவதற்கு முன் கெபாசிட்களை செயலிழக்கச் செய்து விட வேண்டும்.
*இன்வெட்டரை ஈரம் படாமல் மழை, பனி அல்லது எவ்வித திரவங்களும் படாமல் பாதுகாக்க வேண்டும்.
*பேட்டரிக்குள் கொரோஸிவ் ைடல்யூட்சல்ஃப்யூரிக் ஆசிட் எலக்ட்ரோலைட்டாக இருக்கும். அதனால் உடலில், கண்களில் அல்லது ஆடைகளில் படாமல் கவனமாக இருத்தல் அவசியம்.
*பேட்டரிக்கு அருகே புகை பிடிக்கக் கூடாது. பேட்டரிக்கு அருகே நெருப்பு ஸ்பார்க் அல்லது நெருப்பு சம்பந்தமான ெபாருட்கள் இல்லாமல் கவனமாக பார்த்திருக்க வேண்டும்.
*மோதிரம், பிரேஸ்லெட், கடிகாரம் ஆகியவற்றை பேட்டரியை பழுது பார்க்கும் போது கழற்றி வைத்து விடச் சொல்லவும். இல்லையென்றால் அவை நெருப்புக் காயங்களை ஏற்படுத்தி விடும் அபாயம் உண்டு.
*இன்வெட்டரை வலுவான பீடத்தின் மீதுதான் வைக்க வேண்டும்.
*பழுதடைந்த அல்லது குறைபாடுள்ள மெயின் சப்ளை இருக்கும் போது மின்சாரக் கருவியை இயக்காதீர்கள்.
*பெட்ரோலையோ, சட்டென பற்றிக் கொள்ளும் திரவங்களையோ இன்வெட்டர்களை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தக் கூடாது. சில சமயம் அவை தீப்பிடிக்கும். வெடித்து விடும் அபாயமும் உண்டு.இன்வெட்டர் இயக்கத்தில் பாதுகாப்பாக இருங்கள். விபத்தின்றி வாழுங்கள்.
– அ.சித்ரா, காஞ்சிபுரம்.
The post இன்வெட்டர்களில் கவனம் தேவை appeared first on Dinakaran.