- திருக்கனூர்
- அமுதாசுராபி
- மதுபார்
- மணலிப்பட்டு சாலை
- Koonichampattu
- கேதிராவன்
- செட்டிப்பட்டு
- சக்திவேல்
- செட்டிப்பட்டு
திருக்கனூர், ஜூலை 17: திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு மணலிபட்டு ரோட்டில் அமுதசுரபி மதுபார் உள்ளது. இங்கு, செட்டிப்பட்டு பகுதியை சேர்ந்த கதிரவன் (41), நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அருகில், செட்டிப்பட்டை சேர்ந்த சக்திவேல் (40) என்பவரும், தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருதரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கதிரவனுக்கும், சக்திவேலுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கதிரவனுக்காக பக்கத்தில் இருந்த அவரது நண்பர் ஆனந்த் தடுத்தார்.
அப்போது சக்திவேல் தரப்பினர் தாக்கியதில் ஆனந்துக்கு முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர், தனது சகோதரர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, அவரது அண்ணன்களான அருள் மற்றும் ஒருவர் அங்கு வந்து, சக்திவேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. உடனே சக்திவேலுக்கு ஆதரவாக பார்த்திபன், காளிதாஸ் மற்றும் ஒருவர் அங்கு வந்து கதிரவன் ஆதரவாளர்களை தாக்கியுள்ளனர்.
மோதலில் காயமடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். பின்னர், திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். செட்டிப்பட்டு சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கதிரவன், கூனிச்சம்பட்டு அருள், ஆனந்த் மற்றும் ஒருவர் மீதும், கதிரவன் கொடுத்த புகாரின்பேரில் செட்டிப்பட்டு சக்திவேல், பார்த்திபன், காளிதாஸ் மற்றும் ஒருவர் மீதும் என மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மோதலில் தாக்கப்பட்ட கதிரவன் ஊர்க்காவல் படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மதுபாரில் இருதரப்பினர் மோதல்: 8 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.