பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன் கிளியன் எம்பாப்பே (25) அந்த நாட்டில் உள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக 2018 முதல் விளையாடி வந்த எம்பாப்பே 2023ம் ஆண்டே அணி மாறப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அந்த சீசனை பிஎஸ்ஜி அணிக்காக விளையாடியர், இப்போது அடுத்த சீசனுக்கு ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியில் நேற்று முறைப்படி இணைந்துள்ளார்.
அங்குள்ள சாண்டியாகோ அரங்கில் ரசிகர்கள் முன்னால் பேசிய எம்பாப்பே, ‘இது எனக்கு நம்ப முடியாத நாள். நான் சிறுவயதில் இருந்தே மாட்ரிட் அணிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று நான் இங்கு நின்று கொண்டு இருக்கிறேன். இது அர்த்தம் உள்ள நாள்’ என்றார். பிஎஸ்ஜி அணியில் நட்சத்திர வீரருக்காக 10ம் எண் சீருடை அணிந்து விளையாடிய எம்பாப்பே, மாட்ரிட் அணிக்காக 9ம் எண் சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்.
The post ரியல் மாட்ரிட் அணியில் எம்பாப்பே appeared first on Dinakaran.