×
Saravana Stores

சரக்கு வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்றவர் பலி

 

திருப்பூர், ஜூலை 16: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே வசித்து வந்தவர் ராஜேந்திரன் (55). இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணி புரிந்து வந்தார். திருப்பூர் குமரன் சாலை எம்ஜிஆர் சிலை சிக்னல் அருகே நேற்று சாலையை கடக்க முயன்றார். அப்போது குமரன் சாலையில் இருந்து வளர்மதி நோக்கி சென்ற சரக்கு வேன் மோதியதில் கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவர் கை மீது சரக்கு வேனின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் பலியானார். இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து, ராஜேந்திரன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து லாரி ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சரக்கு வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்றவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Rajendran ,Tirupur Kumaran Road ,MGR ,Dinakaran ,
× RELATED முதியவரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர்