- வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்
- திருவண்ணாமலை கலெக்டர்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை கலெக்டர்
- திருவண்ணாமலை
- கலெக்டர்
- அலுவலகம்
- பாஸ்கரா
- பாண்டியன்
திருவண்ணாமலை, ஜூலை 16: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள்குறைதீர்வு கூட்டத்தில், 662 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமைதோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி, வேளாண் இணை இயக்குநர்(பொறுப்பு) உமாபதி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, சாலை வசதி, வீடு வழங்கும் திட்டம், பயிர் கடன், தாட்கோ கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 662 பேர் மனு அளித்தனர்.
அதேபோல், பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்துக்கு நேரில் சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். மேலும், குழந்தைகளுடன் மனு அளிக்க வந்திருந்த தாய்மார்களுக்கு, தனியாக அறை ஒதுக்கப்பட்டு, குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல், மனுக்களை எழுதி ெகாடுத்து உதவி செய்வதற்காக, அலுவலக நுழைவு வாயில் அருகே அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. அதேபோல், நேற்று மாலை சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
The post வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் 662 பேர் கோரிக்கை மனு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.