×
Saravana Stores

ஆட்டோ மோதி முதியவர் பலி

ரிஷிவந்தியம், ஜூலை 16: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரோடு மாமனந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (55). அதை ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர்கள் இருவரும் உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்ேபாது, ரிஷிவந்தியம் காப்புக்காடு பெரியாயி கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும், ஆறுமுகத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்டோ மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Rishivanthiam ,Venkatesan ,Road Mamanandal village ,Kallakurichi district ,Arumugam ,Abepadu ,Rishivantiyam reserve ,Periyai temple ,
× RELATED இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம் : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்