×
Saravana Stores

பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நகைச்சுவையாகவோ, பொது வெளியிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது: மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நகைச்சுவையாகவோ, பொது வெளியிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது மீறி பயன்படுத்தினால் பட்டியல், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பட்டியலின சாதிப் பிரிவு பட்டியலில் 48-வதாக சண்டாளர் என்ற சாதிப் பெயர் உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும் அவமதிப்பையும் சுட்டுவதாக இருக்கின்றன. தங்களுடைய சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதுகின்ற சாதிகள் அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.

மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளைச் செய்கின்ற சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்குப் பயன்படுத்துவதும், கலை இலக்கியங்களிலும், திரைப்பட நகைச் சுவைக் காட்சிகளிலும், திரைப்படப் பாடல்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன. இது, அப்பெயர்களிலுள்ள மக்களையும் அவர்களைப் போன்ற மக்களையும் புண்படுத்தும் செயலாகும். தவிர இது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற எண்ணமும் பொதுச் சமூகத்தில் இல்லை என கூறப்பட்டுள்ளது.

The post பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நகைச்சுவையாகவோ, பொது வெளியிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது: மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Sanjaya ,Dinakaran ,
× RELATED இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.....