- காமராஜ்
- எதிர்ப்பு
- ராகுல் காந்தி
- தில்லி
- பெருந்தலைவர் காமராஜர்
- விருதுநகர்
- டாக்டர்
- வரதராஜுலு நாயுடு
- காங்கிரஸ்
- ராகுல்
டெல்லி: காமராஜரின் கல்விப் பணி என்றும் நினைவில் நிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர், விருதுநகரில் 15.07.1903 அன்று பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு அறிமுகத்தால் 1919ம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் காமராஜர் கலந்துகொண்டார். 1954ம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார்.
ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். 2006ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15ம் நாளினை “கல்வி வளர்ச்சி நாளாக” அறிவித்தார். அதன்படி காமராஜரின் பிறந்த நாளானது தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிலையில், காமராஜரின் 122-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது கல்விப் பணியை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; காமராஜரின் கல்விப் பணி என்றும் நினைவில் நிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஸ்ரீ கே.காமராஜ் ஜியின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள்.
ஒரு உண்மையான தேசபக்தர் மற்றும் வெகுஜனத் தலைவர், அவர் அயராது உழைத்து, நமது சமூகத்தின் நலிந்த பிரிவினரை உயர்த்துவதற்கு மற்றவர்களை ஊக்கப்படுத்தினார்.
கல்வி தந்தை என்ற அவரது மரபு எப்போதும் நினைவில் நிற்கும். இவ்வாறு ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
The post காமராஜர் பிறந்தநாள் இன்று.. அவரது கல்விப் பணி என்றும் நினைவில் நிற்கும்: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவு!! appeared first on Dinakaran.