×
Saravana Stores

செஃல்பியால் விபரீதம்.. ரயில் தண்டவாளத்தில் நின்று செஃல்பி எடுத்த தம்பதி: திடீரென ரயில் வந்ததால் 90அடி பள்ளத்தில் குதித்ததால் பரபரப்பு!!

ஜெய்பூர்: ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் நின்று செஃல்பி எடுக்க முயன்ற தம்பதி 90 அடி பள்ளத்தில் விழுந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதிலும் குட்டி காஷ்மீர் என்று அழைக்கப்படும் கோரம் காட் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

அந்த வகையில் இயற்கை அழகை ரசிக்க வந்த தம்பதி அங்குள்ள பழமையான தண்டவாளத்தில் நின்று செஃல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென ரயில் வந்ததால் அலறிய தம்பதி அச்சத்தில் 90 அடி பள்ளத்தில் குதித்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட தம்பதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செஃல்பி மோகத்தால் ரயில் வருவதை கூட அறியாமல் நின்ற தம்பதி அதிர்ச்சியில் பள்ளத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செஃல்பியால் விபரீதம்.. ரயில் தண்டவாளத்தில் நின்று செஃல்பி எடுத்த தம்பதி: திடீரென ரயில் வந்ததால் 90அடி பள்ளத்தில் குதித்ததால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Cephaly ,Jaipur ,Rajasthan ,Kuti Kashmir ,Cephie ,
× RELATED புத்தகம் வழங்கிய ஒருமாதத்தில் கோத்ரா...