×
Saravana Stores

மணிப்பூரில் தீவிரவாதிகள் சுட்டதில் சிஆர்பிஎப் வீரர் பலி

இம்பால்: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜிரிபாம் மாவட்டம் மோங்பாங் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த குக்கி தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுத குழுவினர் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் மத்திய பாதுகாப்பு படை வீரர் (சிஆர்பிஎப்) ஒருவர் பலியானார். இன்னொரு வீரர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post மணிப்பூரில் தீவிரவாதிகள் சுட்டதில் சிஆர்பிஎப் வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : CRPF ,Manipur Imphal ,Manipur ,Mongbang ,Jiribam district ,Kuki ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்