- செல்வராஜ்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருப்பூர் தெற்கு தொகுதி
- திருப்பூர்
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முஸ்லிம்கள்
- குர்ஆன்
- திருப்பூர் தெற்கு
- தொகுதியில்
- தின மலர்
திருப்பூர், ஜூலை 14:திருப்பூர் தெற்கு தொகுதியில் அரசு சார்பில் அரபி கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சிறுபான்மையினர் அனைத்து மாவட்டங்களிலும் வசித்து வருகிறார்கள். இஸ்லாமியர்கள் திரு குர் ஆன் படித்து வருகிறார்கள். திருகுர் ஆன் அரபி உள்ளிட்ட மொழிகளில் உள்ளன. இதனை அறியும் வகையில் அரபி மொழியை இஸ்லாமியர்கள் பலரும் ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்.
இதற்காக இஸ்லாமிய மாணவ,மாணவிகளும் அரபி கற்க கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இஸ்லாமிய மாணவ மாணவிகள் அரபி கல்லூரிகளில் படிக்க கோவை அல்லது திருச்சி செல்ல வேண்டியுள்ளது. இதனால் திருப்பூரில் ஒரு அரபி கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, செல்வராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செல்வராஜ் எம்.எல்.ஏ. கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் குறிப்பாக திருப்பூர் தெற்கு தொகுதியில் சிறுபான்மையினர் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள்.
அரபி படிக்க வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பலர் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசு சார்பில் அரபி கல்லூரி அமைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். சட்டசபையிலும் இதனை தெரிவித்துள்ளேன். பொதுமக்கள் மற்றும் எனது கோரிக்கையை ஏற்று இது தொடர்பாக அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். கல்லூரி அமைப்பது தொடர்பான தகவல் வந்தவுடன் இடம் தேர்வு உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post திருப்பூர் தெற்கு தொகுதியில் அரசு சார்பில் அரபி கல்லூரி அமைக்க வேண்டும் செல்வராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை appeared first on Dinakaran.