×
Saravana Stores

பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோவில் பாலாலயம் விழா

 

பல்லடம், ஜூலை 14: பல்லடம் கடை வீதியில் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள பக்தர்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் வளாகத்தில் பாலாலயம் செய்யப்பட்டது. விரைவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் வசந்தாமணி தங்கவேல்,தினேஷ்குமார், ராஜசேகரன், இந்து சமய அறநிலைய துறை மாவட்ட அறங்காவலர் ஆடிட்டர் முத்துராமன்,அறநிலைய துறை துணை ஆணையர் ஹர்சினி, கோவில் செயல்அலுவலர் ராமசாமி, அறநிலைய துறை பல்லடம் சரக ஆய்வாளர் கண்ணன், தேசபக்தர்கள் பேரவை தலைவர் பாலாஜி ஈஸ்வரன்,அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார்,

மதிமுக நகர செயலாளர் வைகோ பாலு,மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், நகர திமுக நிர்வாகிகள் வேலுமணி,குட்டி பழனிசாமி, ரத்தினசாமி, மார்க்கெட் தங்கவேல், ஜாகீர்உசேன்,கயாஸ்அகமது, சேக்மக்தூம்,கெளஸ்பாட்ஷா, சேரன் செந்தூர்ராஜன்,இளைஞரணி சிலம்பரசன், சுந்தரமூர்த்தி, பாலசுப்பிரமணி,விஸ்வநாதன்,குமரேசன், லிங்ககுருசாமி, அதிமுக நிர்வாகி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பல்லடம் கடை வீதி மாகாளியம்மன் கோவில் பாலாலயம் விழா appeared first on Dinakaran.

Tags : Palladam Shop Road Magaliyamman Temple Ballalayam Festival ,Palladam ,Magaliyamman ,Dinakaran ,
× RELATED பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க கோரிக்கை