×
Saravana Stores

பார்போரா சாம்பியன்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பரபரப்பான பைனலில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியுடன் (28 வயது, 7வது ரேங்க்) நேற்று மோதிய பார்போரா (28 வயது, 32வது ரேங்க்) 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 1 மணி, 56 நிமிடம் போராடி வென்றார்.

இது அவர் வென்ற 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக, 2021ல் பிரெஞ்ச் ஓபனில் பார்போரா கோப்பையை கைப்பற்றி இருந்தார். ஜாஸ்மின், பார்போரா இருவரும் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post பார்போரா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Barbora Champion ,Czech Republic ,Barbora Krejcikova ,Wimbledon Grand Slam tennis ,Italy ,Jasmine Palini ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…