அய்ஸ்வால்: மிசோராமில் இருந்து பெரிய அளவில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கவ்சாலின் லுங்வார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சம்பை நகரில் இருந்து அய்ஸ்வாலுக்கு சென்ற ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் சென்ற நடைபாதை வியாபாரியிடம் இருந்து 10.07 லட்சம்(115.55 கிலோ) மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் அடங்கிய 106 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இந்த போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.32 கோடிஆகும்.
The post மிசோரமில் ரூ.32 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.