×
Saravana Stores

தெலங்கானா அரசியலில் பரபரப்பு பிஆர்எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்: இதுவரை 9 பேர் காங்கிரசில் இணைந்தனர்

திருமலை: தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகி காங்கிரஸில் இணைந்ததால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் செர்லிங்கம்பள்ளி பி.ஆர்.எஸ். எம்எல்ஏ அரிகேபுடி காந்தி அக்கட்சியில் இருந்து விலகி நேற்று, ஐதராபாத் ஜூப்லிஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அப்போது மியாப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் உப்பளபதி ஸ்ரீகாந்த், சந்தாநகர் கவுன்சிலர் மஞ்சுளா, செரிலிங்கம்பள்ளி கவுன்சிலர் ராகம் நாகேந்தர் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிஆர்எஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 24ம் தேதி துவங்க உள்ள நிலையில் மேலும் 2 பேர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

The post தெலங்கானா அரசியலில் பரபரப்பு பிஆர்எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்: இதுவரை 9 பேர் காங்கிரசில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : MLA ,Telangana ,Congress ,Tirumala ,PRS ,P.R.S. ,Arikebudi Gandhi ,Jubilee Hills ,Hyderabad ,
× RELATED சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி...