கரூர், ஜூலை 13: கரூர் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், நேற்று அரசு நடுநிலைப்பள்ளியில பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் க.பரமத்தி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உளள ஒரு பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் மறைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையில், போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக சில மணி நேரம் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு appeared first on Dinakaran.