- பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
- காவல்துறை
- பல்லடம்
- மங்கலம்
- காமநாயக்கன்பாளையம்
- அவிநாசிபாளையம்
- உட்கோடா சரகா போலீஸ்
- குறை ஊராட்சி
- தின மலர்
பல்லடம், ஜூலை13: பல்லடத்தில் காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது.பல்லடம் உட்கோட்ட சரக காவல்துறைக்குட்பட்ட பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசிபாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் இடப்பிரச்சினை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினை உள்பட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், பல்லடம் டி.எஸ்.பி. விஜிகுமார் தலைமையில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் பல்லடம் டி.எஸ்.பி.அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது.
The post காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் appeared first on Dinakaran.