- உடுமலை அரசு கலைக் கல்லூரி
- உடுமலை
- ஸ்டார் ரோட்டரி சங்கம்
- முதல்வர்
- சோ.கே.கல்யாணி
- அ. மலர்வண்ணன்
- துறை
- தின மலர்
உடுமலை, ஜூலை 13: உடுமலை அரசு கலைக் கல்லூரிக்கு ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் சார்பாக குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் ஆ.மலர்வண்ணன் வரவேற்றார். ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிவக்குமார் முன்னலை வகித்தார்.
பட்டய தலைவர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் பிரசன்னகுமார்,செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் தீனதயாளன் மற்றும் கனல்ஜோதி ஆகியோர் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை வழங்க கல்லூரி முதல்வர் பெற்றுக் கொண்டார்.
இக் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தைக் கல்லூரியின் விளையாட்டுத்துறை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக உடற்கல்வி இயக்குநர் மனோகர் செந்தூர் பாண்டியிடம் கல்லூரி முதல்வர் வழங்கினார்.
The post உடுமலை அரசு கலைக் கல்லூரிக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் அன்பளிப்பு appeared first on Dinakaran.