×
Saravana Stores

மெட்ரோ ரயில் பணி காரணமாக 2 நாட்கள் மடிப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஜூலை 13: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மடிப்பாக்கம் பகுதியில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்து, போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ள உள்ளதால் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் இடது புறம் திரும்பி, லேக் வியூ சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி, ராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.

மடிப்பாக்கத்தில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்பி, சபரி சாலை ஆக்சிஸ் வங்கி வழியாக வந்து வலது புறம் திரும்பி, லேக் வியூ சாலையில் இருந்து மீண்டும் வலது புறம் திரும்பி, ராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம். கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் பணி காரணமாக 2 நாட்கள் மடிப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madipakkam ,Chennai ,Dinakaran ,
× RELATED சிலிண்டர் விபத்தில் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு