நியூயார்க்: வரும் 2080ல் உலக மக்கள் தொகை 1,030 கோடியாக இருக்கும் என்று ஐநா சபை கணித்துள்ளது. உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சபை, ‘உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2024’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதில், ‘கொரோனா காலகட்டத்தில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70.0 ஆண்டுகளாக குறைந்த நிலையில், தற்போது மனிதனின் சராசரி ஆயுட்காலம் 73.3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. வரும் 2054ம் ஆண்டில் உலகளாவிய சராசரியாக ஆயுட்காலம் 77.4 ஆண்டுகளாக இருக்கும். வருகிற 2070ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 2.2 பில்லியனை (220 கோடி) எட்டும்.
வருகிற 2100ம் ஆண்டில் உலக மக்கள்தொகையின் அளவு இப்போது இருப்பதை காட்டிலும் 6% அதிகமாக இருக்கும். நடப்பு நூற்றாண்டில் உலக மக்கள்தொகை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2080ம் ஆண்டுகளின் மத்தியில் 8.2 பில்லியனில் (820 கோடி) இருந்து 10.3 பில்லியனை (1,030 கோடி) எட்டும். தற்போதைய மக்கள் தொகை 812 கோடியாக இருக்கும் நிலையில், சீனா, ஜப்பான் போன்ற 63 நாடுகளில் இந்தாண்டுக்கு முன்னர் மக்கள் தொகை புதிய உச்சத்தை எட்டியிருந்தாலும், 126 நாடுகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2080ல் உலக மக்கள் தொகை 1,030 கோடி: ஐநா சபை தகவல் appeared first on Dinakaran.