×

அரியலூரில் இன்று நடக்கிறது: கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர்க்கும்நாள் முகாம்

அரியலூர், ஜூலை 12: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி கூட்டுறவுத்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறையின்கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் பொருட்டு இரு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின்போது அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரியலூர் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரையின்படி இரு மாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுதுறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைதீர்க்கும் பணியாளர் நாள் நடத்தப்பட உள்ளது. முதல் பணியாளர் நாள் இன்று (12.07.2024) காலை 10.30 மணிக்கு அரியலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in < http://rcs.tn.gov.in > என்ற இணைய தளத்தில் Online மூலம் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள் கூட்டத்தின்போது விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்களை நிகழ்ச்சியின்போதே பதிவேற்றம் செய்யப்பட்ட் 2 மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். ஆகவே, அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களும், நிறுவனங்களின் அனைத்து நிலை பணியாளர்கள், நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள், கட்டுநர்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் பணியாளர் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தீபாசங்கரி தெரிவித்துள்ளார்.

The post அரியலூரில் இன்று நடக்கிறது: கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர்க்கும்நாள் முகாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Chief Minister of ,Tamil ,Nadu ,Minister of Cooperatives ,Cooperative Department ,
× RELATED பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு வாகன பிரசாரம்