×
Saravana Stores

சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

கரூர், ஜூலை 12: வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதை பார்வையிட்டு கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை, ரயிலவே நிலைய வளாகம், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் கார்னர் போன்ற பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிகளவு கால்நடைகள் சுற்றித்திரிகிறது. இதே போல், திண்டுக்கல், திருச்சி போன்ற பிரதான சாலைகளிலும் கால்நடைகள் நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியிலும் கடந்த சில நாட்களாக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிகளவு ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான விழிப்புணர்வை கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur ,Rathinam Road ,Railway Station Complex ,Church Corner ,Lighthouse Corner ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED கரூர்- முக்கணாங்குறிச்சி இடையே சாலை...