×
Saravana Stores

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் பிறந்தநாள் பேச்சு போட்டி

 

திருப்பூர், ஜூலை 12: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பள்ளி மாணவமாணவிகளுக்கு செம்மொழி காவலர், வரலாற்று நாயகன், கலைஞரும் தமிழும் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவமாணவிகளுக்கு பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், பல்கலை வித்தகர், சட்டமன்ற நாயகர் என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டி நடந்தது.

இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2வது பரிசு ரூ.3 ஆயிரம், 3வது பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதில் பள்ளி அளவில் கூடுதலாக சிறப்பு பரிசாக அரசு பள்ளி மாணவமாணவிகள் 2 பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ செய்திருந்தார்.

The post தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் பிறந்தநாள் பேச்சு போட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Development Department ,Tirupur ,Muthamizharinjar ,
× RELATED தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி