ஊட்டி, ஜூலை 12: அதிக லாபம் தரும் பார்சிலி கீரை வகைகளை பயிரிட நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும்பாலான விவசாயிகள் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகள் கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட பல வகையான காய்கறி விவசாயம் மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் சைனீஸ் வகை காய்கறி விவசாயம் மேற்க்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சைனீஸ் கேபேஜ், ஐஸ்பெர்க், புருக்கோலி, சுக்குனி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர். சிலர் சூப் வகைளுக்கு அதிகளவு பயன்படும் பார்சிலி வகை கீரைகள் பயிரிடுகின்றனர்.
ஒரு முறை பயிரிட்டால் ஓராண்டிற்கு மேல் அறுவடை செய்யலாம் என்பதால், தற்போது பலர் இந்த வகை கீரைகளை விவசாயம் செய்து வருகின்றனர். கிலோ ஒன்று ரூ.50 முதல் 80 வரை செல்வதால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. தற்போது, சின்னகுன்னூர், எப்பநாடு, மோரிக்கல், தும்மனட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் சிலர் பார்சிலி வகை கீரை வகைகளை பயிரிட்டுள்ளனர்.
The post அதிக லாபம் தரும் பார்சிலி வகை கீரை appeared first on Dinakaran.