கூடலூர், ஜூலை 12: கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மூலச்செறு முள்ளி பகுதியில் 2வது முறையாக புகுந்த ஒற்றை காட்டு யானை ஆட்டோவை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மாணிக்கல்லாடி அஞ்சு குன்னு, மூலச்செறு முள்ளி உள்ளிட்ட கிராமங்களில் காலை, மாலை மற்றும் இரவு நேரத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இந்த யானை விவசாய பயிர்களையும் விளை நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
வாகனங்களையும் சேதப்படுத்தும் இந்த யானை நேற்று முன் தினம் இரவு அப்பகுதியில் வசிக்கும் மணி என்பவரது ஆட்டோவை உடைத்து சேதப்படுத்தியது. அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்ட ஸ்கூட்டி ஒன்றையும் யானை சேதப்படுத்தியது. இதே பகுதிக்கு மீண்டும் வந்த காட்டு யானை, மணியின் ஆட்டோவை இரண்டாவது முறையாக சேதப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
The post கூடலூர் அருகே 2வது முறையாக ஆட்டோவை சேதப்படுத்திய காட்டு யானையால் பீதி appeared first on Dinakaran.