நன்றி குங்குமம் தோழி
பாத வெடிப்பு என்பது பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், நமது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருக்கும் பட்சத்திலேயே பாத வெடிப்பானது உண்டாகிறது. இந்த வெடிப்பை சரிவர பராமரிக்காமல் இருக்கும் பட்சத்தில் புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.
*பாத வெடிப்பு பிரச்னை பொதுவாக கிருமிகளின் தொற்று மூலமாகவும், உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படுகிறது.
*நாள்தோறும் உறங்குவதற்கு முன்னதாக பாதத்தில் மாய்சரைசர் அல்லது வாசலினை தடவிய பின்னர் சாக்ஸ் அணிந்து உறங்கினால் பாதங்கள் மிருதுவாகி பளபளப்பாக மாறும்.
*தினமும் சாப்பிடும் வாழைப்பழத்தை நன்கு மசித்து பாதத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர்., நீரினால் கழுவி வர பாத வெடிப்புகள் மறைய துவங்கும்.
*மருதாணியின் இலைகளை நன்றாக அரைத்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பானது உடனடியாக குணமாகும்.
*எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாதத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு விரைவில் குணமாகும். கால்களில் தோல் பகுதி வறண்டு காணப்பட்டால் இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால் மிருதுவாக மாறுவதோடு வெடிப்பு ஏற்படாமல் இருக்கும்.
*இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன், சில துளிகள் தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பாதங்கள் மிகவும் வறண்டு வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இந்தக் கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம். இது பாதங்களில் உள்ள இறந்த
செல்களை நீக்கும்.
– கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.
The post பாதங்களை பாதுகாக்க சில யோசனைகள்… appeared first on Dinakaran.