×
Saravana Stores

20 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் அளிப்பு

நாமக்கல், ஜூலை 11: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்குள் இடமாறுதல் அளிப்பதற்கான கலந்தாய்வு நேற்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில், 20 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கப்பட்டது. இவர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தேர்வு செய்தனர். இந்த கலந்தாய்வில், தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 3 பேருக்கும், ஆங்கில ஆசிரியர்கள் 2, கணித ஆசிரியர்கள் 7, அறிவியல் ஆசிரியர்கள் 8 பேருக்கும் மாறுதல் அளிக்கப்பட்டது. சமூக அறிவியல் பாடத்துக்கு மாவட்டத்தில் காலிபணியிடம் எதுவும் இல்லை. மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் புதிய பணியிடத்தில் உடனடியாக சேரும்படி கூறி, அதற்கான உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழங்கினார். நாளை முதல் வெளி மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

The post 20 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் அளிப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,District ,Principal Education Officer ,Maheshwari ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு...