×
Saravana Stores

அவதூறு பரப்பிய தொழிலாளி கைது

உடுமலை, ஜூலை 10: உடுமலை அருகே தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஜோத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பில்நெட் (51). கூலித்தொழிலாளி. இவர் தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறையினர், நீதிமன்றம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வந்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பில்நெட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post அவதூறு பரப்பிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Tamil Nadu ,Chief Minister ,Billnet ,Jothambatti ,Tirupur district ,Tamil ,Nadu ,
× RELATED தொடர் கனமழை காரணமாக வேகமாக நிரம்பும்...