×
Saravana Stores

தென்மேற்கு பருவமழை தொடங்குவதால் ஆற்று வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது குறித்து ஒத்திகை

கூடலூர், ஜூலை 10: கூடலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் கூடலூர் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீர் நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துகளில் இருந்து விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பது மற்றும் மீட்பது குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் நீர்நிலைகளில் ஆபத்து ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் மாணவர்கள் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என்றும், அறிமுகம் இல்லாத புதிய பகுதிகளில் நீர்நிலைகளில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்கும் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியும் செய்து காண்பிக்கப்பட்டது.

The post தென்மேற்கு பருவமழை தொடங்குவதால் ஆற்று வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது குறித்து ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Fire and Rescue Station ,Bharatiyar University ,
× RELATED தகவல் தொடர்பு, ஊடகவியல் துறையில்...