×
Saravana Stores

மாரியம்மன் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி செய்யாறு அருகே சோகம்

செய்யாறு, ஜூலை 10: செய்யாறு அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் மின்சாரம பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அரசாணைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அருண்குமார்(25), டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றார். திருவிழாவையொட்டி கோயிலை சுற்றி மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்போது ‘சீரியல் லைட்’ மீது தவறுதலாக அருண்குமாரின் கைபட்டது. இதில் மின்கசிவு ஏற்பட்டு அருண்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அருண்குமாரின் தாய் காமாட்சி, தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மாரியம்மன் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி செய்யாறு அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Mariamman temple festival ,Seyyar ,Radhakrishnan ,Aranaipalayam village ,Tiruvannamalai district ,Arun Kumar ,Cheyyar ,
× RELATED செய்யாறு அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: போக்சோவில் வாலிபர் கைது