ஊட்டி, ஜூலை 10: நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. பொதுமக்கள் வசதிக்காக வார்டு பகுதிகளில் நகராட்சி சார்பில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. இதனை வார்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். கழிப்பிடங்கள் கட்டப்பட்ட போது முறையாக பராமரிக்கப்பட்டன. காலபோக்கில் சரியாக பராமரிக்கப்படாமல் கழிப்பிடங்களில் தண்ணீர் இன்றி மக்கள் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தற்போது இவை பயன்பாடற்ற நிலையில் உள்ளன. பல வார்டுகளில் கழிப்பிடங்கள் புதர்மண்டி பராமரிப்பின்றி விஷஜந்துகள் நடமாடும் பகுதியாக மாறியது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் இந்த கழிப்பிடங்களை பயன்படுத்தாமல் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சுற்றுலா தலங்களை ஒட்டியுள்ள பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால், சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்து வருகின்றனர். திறந்தவெளி பகுதிகள் கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி, மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள கழிப்பிடங்களும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. எனவே பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டு தற்போது பயன்பாடின்றி உள்ள கழிப்பிடங்களை சீரமைத்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் பெயர்:
Agniveer (MR) (Musician) (02/2024) Batch.
சம்பளம்: முதல் வருடம் ₹30 ஆயிரம், 2ம் வருடம் ₹33 ஆயிரம், 3ம் வருடம் ₹36,500, 4ம் வருடம் ₹40 ஆயிரம்.
வயது: 01.11.2003க்கும் 30.04.2007க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய இசையில் முறையான பயிற்சி பெற்று ஏதாவதொரு இசைக் கருவியை சிறப்பாக வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
உயரம்: ஆண்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள் குறைந்த பட்சம் 152 செ.மீ., இருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி: ஆண்கள் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 20 ஸ்குவாட்ஸ், 12 புஷ்அப்கள் எடுக்க வேண்டும். பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 15 ஸ்குவாட்ஸ், 10 சிட்அப்கள் எடுக்க வேண்டும்.பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 4 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
கடற்படை பயிற்சி ஓடிசாவிலுள்ள ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் நவம்பரில் தொடங்கும்.
கட்டணம்: ₹60/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
The post பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பிடங்களை பராமரிக்க கோரிக்கை appeared first on Dinakaran.